அடப்பாவிங்களா இப்படியா பண்ணுவீங்க?… கல்லூரி பேராசிரியை உடன் பழகிய 2 இளைஞர்கள்… இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தை சேர்ந்த பிரோஸ் (28) என்பவருடைய நண்பர் கோட்டையம் மாவட்டத்தை சேர்ந்த மார்ட்டின் ஆண்டனி (27). இவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி மூலமாக கல்லூரி பேராசிரியை ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் பிரோஸ் மற்றும் ஆண்டனி இருவரும் சேர்ந்து பேராசிரியையை கடந்த 13ஆம் தேதி கொச்சிக்கு வரவழைத்து MDMA என்ற உயர்ரக போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர்.

பிறகு அவர் மயக்கம் அடைந்த நிலையில் அவரை களமஞ்சேரி மற்றும் நெடும்பாசேரி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி பேராசிரியை போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த இருவரையும் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பேராசிரியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.