தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கள உதவியாளர் (Field Assistant) பணிக்கான உடல் தகுதித் தேர்வில் புதிய விதிமுறைத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்குமுன்னர் வெறும் காலில் மட்டுமே மின் கம்பம் ஏற வேண்டும் என்ற நிபந்தனை இருந்த நிலையில், தற்பொழுது தேர்வர்கள் ஷூ (Shoes) அணிந்து மின் கம்பம் ஏறலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த புதிய விதிமுறையின்படி, தேர்வர்கள் ஷூ அணிந்தவாறு 30 அடி உயரமுள்ள மின் கம்பத்தில் 8 நிமிடங்களுக்குள் ஏறி தங்களின் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் தற்பொழுது 1,850 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தீவிரமாகத் தயாராகி வருகிறது. வெறும் காலில் மின் கம்பம் ஏறும் போது தேர்வர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிரடித் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மின் வாரிய வேலைக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தேர்வர்கள் மத்தியில் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
