சீமானுக்கு தவெக வைத்த அதிரடி செக்… முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசியதற்கு கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!!

By Soundarya on ஆனி 14, 2026

Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற நாதக கூட்டத்தில் பேசிய சீமான், தவெக தலைவர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசியிருந்தார். இந்த உரையின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஸ்ரீநாத் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பும் வகையில் அவர் பேசியதாகக் குற்றம்சாட்டி, தவெகவின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் இந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் செயல்பாடுகள் மற்றும் தவெக அமைச்சர்களின் பேட்டிகள் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்த புகாரானது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், பப்ளிசிட்டிக்காகச் செய்யப்படுகிறது என்றும் மாற்றுத் தரப்பிலிருந்து விமர்சனங்களும், விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றன.