வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் உஷார்!… ₹70,000 நஷ்டம்… வசமாக சிக்கிய இந்திய இளைஞர்… ஜார்ஜியா அரசு விதித்த அதிரடி தண்டனை…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

ஹரியானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது உயர்கல்விக்காக ஜார்ஜியா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக சில பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க நேரிட்டது. தனது அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, நம் ஊரில் உள்ள ஸ்விக்கி, சொமாட்டோவைப் போல அங்கு இயங்கி வரும் ‘வோல்ட்’ என்ற உணவு டெலிவரி நிறுவனத்தில் அவர் பணியாற்றத் தொடங்கினார். ஜார்ஜிய நாட்டு விதிகளின்படி அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வேலை பார்ப்பது சட்டவிரோதமாகும். ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் வேலை செய்த அவர், வெறும் பதினைந்து நாட்களுக்குள் சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினார்.

எனினும், அவரது இந்த முயற்சி குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது. ‘வோல்ட்’ செயலியில் அவர் சட்டவிரோதமாகப் பதிவு செய்து வேலை பார்த்ததை அந்நாட்டு அதிகாரிகள் தரவு கண்காணிப்பு மூலம் எளிதாகக் கண்டறிந்தனர். மாணவர் விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு உடனடியாக 2,000 லாரி அபராதமாக விதிக்கப்பட்டது. தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை விட இரண்டு மடங்கு அதிக தொகையை அபராதமாகக் கட்ட நேரிட்டதால் மனமுடைந்த அந்த இளைஞர், “இதற்கு பேசாமல் சொந்த நாட்டிலேயே டெலிவரி பாயாக வேலை பார்த்திருக்கலாம்” என வேதனையுடன் தெரிவித்தார்.