30 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொடுத்தும் மேலும் வரதட்சணை கேட்டு மிரட்டல்.. பிரபல யூடியூபர் மீது பரபரப்பு புகார்..!

By Nanthini on ஆடி 5, 2025

Spread the love

சமீபத்தில் திருப்பூர் இளம் பெண் ரிதன்யா தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் மறைவதற்குள் அடுத்ததாக பிரபல youtube மீது வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. மொபைல், டிவி மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருள்களின் தரத்தை பற்றி வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு வருபவர்தான் சுதர்சன். யுவர் youtube இல் பதிவு செய்யும் வீடியோக்கள் சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து செல்லும். அப்படி youtubeல் பிரபலமாக இருக்கும் சுதர்சன் மற்றும் அவர் பெற்றோர் மீது தேனி மகளிர் போலீசில் வரதட்சனை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தை கைது செய்ய போலீசார் களமிறங்கியுள்ளனர். சுதர்ஷன் மீது அவர் மனைவி கொடுத்துள்ள புகாரில் பாதிக்கப்பட்ட விமலா தேவி என்பவர் எம்பிபிஎஸ் படித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தபோது சுதர்சன் என்பவர் அறிமுகமாகி இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது விமலாதேவியின் பெற்றோர் 30 பவுன் தங்க நகையும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்பான சீர்வரிசை பொருள்களை கொடுத்துள்ளனர்.

   

அப்போது வீடு சொந்தமாக கட்டும்போது விமலாதேவி இடம் 30 பவுன் நகையை பெற்றுக்கொண்டு வீடு கட்டி புது வீட்டிற்கு குடி போனதாகவும் பிறகு வீட்டுக் கடனை அடைக்க முடியவில்லை என சீர்வரிசை பொருள்கள் போதாது என்று டாக்டருக்கு படிச்சு என்ன சம்பாதிச்சு கொடுக்கிறாய், ஒன்னும் பத்தலை என்றும் மேலும் இருவது பவுன் நகை கொடுத்தால்தான் பெண்ணை வீட்டில் வைத்துக் கொள்வோம் என்றும் கூறி விமலாதேவியை சுதர்சனின் பெற்றோர் அசிங்கமாக பேசியுள்ளனர்.

   

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இருதரப்பினரும் பேச்சுவார்த்தையின் போது விமலா தேவி மற்றும் குழந்தையையும் அழைத்து செல்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்தபோது சுதர்சன் மற்றும் அனைவரும் ஒன்று சேர்ந்து 10 லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டு 30 பவுன் நகையை விற்று மேலும் 20 பவுன் நகையை கொண்டு வந்தால் வாழ முடியும் என்று அதிகமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகார் மனுவில் விமலா தேவி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுதர்ஷன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.