இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.. விஜய்யை Left Handல் முதல்வர் டீல் செய்வார்.. சேகர்பாபு அட்டாக்..!

By Nanthini on ஆடி 5, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது அதற்கான வேலைகளில் களமிறங்கி விட்டன. திமுக மீண்டும் தமிழகத்தில் தங்கள் ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நிலைப்பாடில் உறுதியாக உள்ளது. அதற்கான வேலைகளை முதல்வர் ஸ்டாலின் மும்முரமாக தங்கள் கட்சி நிர்வாகிகளை வைத்து செய்து கொண்டிருக்கின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து விமர்சித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் சேகர்பாபு, முதலில் தன்னையும் தன்னைச் சார்ந்த இருக்கக்கூடிய இயக்கத்தையும் விஜய் பார்க்கச் சொல்லுங்கள். விஜய் போன்றோர் அறையில் இருந்து அரைக்கூவல் விடுவதை எங்கள் முதல்வர் Left Hand-ல் டீல் செய்வார். இதற்கு எல்லாம் பயப்படக்கூடிய இயக்கம் அல்ல திமுக என்று சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். ஆளும் திமுகவை தொடர்ந்து அட்டாக் செய்து வரும் விஜய் நேற்று பரந்தூர் விமான நிலைய விவாகரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுக இடுவோம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.