நாம் சாப்பிடும் மாதுளம் பழத்தில் ஏராளமான நன்மைகள் இருப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அதனுடைய தோளில் பல நன்மைகள் இருப்பது என்பது யாருக்கும் தெரிவதில்லை. தொழில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மாதுளை தோலில் புரதம், பீனாலிக் கலவைகள், புரதம், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. மாதுளை தோலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு முன்பாக உணவில் சேர்க்கக்கூடிய பதத்திற்கு மாதுளை தோலை வெயிலில் உலர்த்தி நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மாதுளையின் தோலில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புச் சேர்மங்கள் நிறைந்துள்ளதால் சளி இருமல் சரி செய்யக்கூடியது. உடலில் உள்ள தேவையற்ற கழிவு நச்சுக்களை வெளியேற்றக்கூடிய ஆக்ஸிஜனேற்றிகள் இதில் அதிகமாக உள்ளது. அதனால் தினமும் சிறிதளவு மாதுளை பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம். இதனால் கல்லீரல், சிறுநீரகங்களின் செயல்பாடு சீரான முறையில் இயங்கி நச்சுக்களை வெளியேற்றும். மாதுளை தோல் பொடியை தேன் மற்றும் தயிரோடு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்பாக மாறும். இனி மாதுளம் பழத்தை உரிக்கும் போது அதனுடைய தோலை தூக்கி எறியாமல் மேலே சொன்ன அனைத்து நன்மைகளையும் கவனத்தில் கொண்டு உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் விதமாக பயன்படுத்துங்கள்.
