“என் குழந்தைகளை நான் பார்க்கக் கூட முடிவதில்லை; அவர்களுக்கு பாடிகார்டு போட்டு பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். எனவே, என்னிடம் யாரும் குழந்தை பாசத்தைப் பற்றிப் பேசாதீர்கள்” என்று நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீருடன் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். தன் மீது வைக்கப்படும் “குழந்தை பாசம் இல்லாதவர்” என்ற விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், தன் பிள்ளைகள் மீது தனக்கு அளவில்லாத அன்பு இருப்பதாகவும், தனது இளைய மகன் தினமும் தன்னுடன் செஸ் விளையாடிவிட்டுத்தான் தூங்கும் வழக்கம் கொண்டவன் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தன் பிள்ளைகளைத் தன்னிடமிருந்து பிரித்து வைத்திருப்பது குறித்துப் பேசிய ரவி மோகன், அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்குக் கூட பாதுகாவலர்கள் அனுப்பப்படுவதால், தன்னால் அவர்களை நெருங்கவோ அல்லது தொலைபேசியில் கூட பேசவோ முடிவதில்லை என்று குற்றம் சாட்டினார். நினைத்திருந்தால் ஒரே நாளில் விவாகரத்து பெற்றிருக்க முடியும் என்றும், ஆனால் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இத்தனை காலம் அமைதியாக இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும், தனது குடும்ப வாழ்க்கையைக் கெடுப்பதற்காகப் பலர் பின்னணியில் வேலை பார்த்ததாக அவர் வேதனை தெரிவித்தார்.
பிள்ளைகளைப் பார்க்க முடியாத ஏக்கத்தில், மன உளைச்சலுக்கு ஆளாகித் தன் கையைத் தானே கிழித்துக் கொண்டதாகக் குறிப்பிட்ட ரவி மோகன், தற்போது தான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், ஆனால் அவர்கள் தனது சொந்த வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார். குடும்பப் பிளவாலும், பிள்ளைகளின் பிரிவாலும் ஒரு தந்தையாக தான் அனுபவித்து வரும் உச்சக்கட்ட மனவேதனையை அவர் இந்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேரை விரைவில் கைது செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைக்கக் கூடாது எனப் பதிவுத்துறை அதிரடி…
சென்னையை அடுத்த சித்தலாம்பாக்கம் ஜெயாநகர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் - சரண்யா தம்பதியரின் மூத்த மகனான கணேஷ்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்த ஒரே வாரத்திற்குள், புதிய அரசு பல்வேறு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், பிற முன்னணி கட்சிகளிலிருந்து அடுத்தடுத்து பலரும்…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் புதிய 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், கடந்த மே 10-ஆம்…