BREAKING: விரைவில் மாறப்போகும் அமைச்சரவை?… ஒரு வாரத்தில் அதிரடி முடிவெடுத்த முதல்வர்…. சற்றுமுன் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி…!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்த ஒரே வாரத்திற்குள், புதிய அரசு பல்வேறு கடுமையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி மகளிருக்கான உரிமைத் தொகையை இன்னும் உயர்த்தி வழங்காதது, அதிமுகவின் ஒரு பிரிவினரை அமைச்சரவையில் இணைத்துக் கொண்டது மற்றும் ஜோதிடர் ஒருவருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டது போன்ற விவகாரங்கள் தவெக அரசுக்கு பெரும் குடைச்சலாக மாறியுள்ளன. இந்தச் சூழலில், இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாகப் பெரிய மாற்றம் நடக்கப் போவதாக தவெக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு விளக்கங்களை அளித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் எந்தெந்தத் துறைகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகக் கூறினார். மேலும், முதலமைச்சர் தினமும் காலை 10 மணி முதல் மாலை வரை தலைமைச் செயலகத்திலேயே தங்கி, அங்கேயே மதிய உணவை உட்கொண்டு அர்ப்பணிப்போடு பணியாற்றி வருவதாகவும், இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரை மக்கள் இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு மாறி மாறி ஆட்சி செய்தவர்களின் தவறுகளையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் தவெக அரசு பதவியேற்ற ஒரே வாரத்தில் உடனடியாக மாற்றிவிட முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு துறையும் தற்போது அதிக நிதி நெருக்கடியில் உள்ளதால், நிர்வாக ரீதியாக முழுமையாக ஆய்வு செய்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றார். பதவியேற்ற முதல் நாளே வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என்று முதல்வர் அறிவித்தபடி, அதற்கான மிகப்பெரிய பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், நிதி ஆதாரங்களைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, வரும் நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற விமர்சனத்திற்கும் அமைச்சர் நிர்மல்குமார் இந்த சந்திப்பில் விளக்கமளித்தார். தவெக ஆட்சியில் இளைஞர்களும் பெண்களும் அதிக அளவில் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ளதால், மக்களின் தேவையை நன்கு அறிந்து அரசு செயல்பட்டு வருகிறது என்றார். முதலமைச்சர் என்னென்ன பணிகளைச் செய்கிறார் என்பது தினசரி அரசு செய்திக் குறிப்புகள் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு அறிவிக்கப்படுவதால், தினமும் செய்தியாளர் சந்திப்பு என்பது கட்டாயமில்லை என்று கூறிய அவர், தேவையான நேரத்தில் தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் நிச்சயமாகச் செய்தியாளர்களைச் சந்திக்கத் தயங்க மாட்டார் என்றும் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Nanthini

Recent Posts

“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” பொறி விற்று பிழைத்த ஏழை… அடித்து தூக்கி எறிந்து அராஜகம் செய்த ரவுடி…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…

26 minutes ago

“இன்ஸ்டாகிராமில் மர்ம பதிவு…” 48 மணி நேரத்தில் அழுகிய நிலையில் பெண் போலீசின் சடலம்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…

36 minutes ago

“ரகசிய 6 போன் கால்கள்…” கோடீஸ்வரர் கொலையில் அதிரடித் திருப்பம்… பெற்ற தந்தையை கொல்ல கூலிப்படைக்கு ஸ்கெட்ச் போட்ட மகனா…? திடீர் டுவிஸ்ட்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…

56 minutes ago

“செங்குத்தான ஏற்றத்தில் பின்னோக்கி பாய்ந்த லாரி…” நொடி பொழுதில் மரணத்தின் பிடியில் சிக்கிய பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…

1 மணத்தியாலம் ago

“அங்கிட்டும் போக முடியாம… இங்கிட்டும் வர முடியாம…” ஜன்னல் கம்பிக்குள் சிக்கிய பலே திருடன்…! கம்புகளாலும் கற்களாலும் வீசியடித்த பொதுமக்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago