தமிழகத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் கூட்டுறவு சங்க வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ போன்ற அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது விவசாயிகளின் நலன் காக்கும் இந்த புதிய முயற்சி அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
கடன் சுமையால் தவித்து வரும் ஏழை, எளிய விவசாயிகளுக்கு வாழ்வாதார நம்பிக்கையளிக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மகிழ்ச்சி அறிவிப்பை, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்படவிருக்கும் வரவிருக்கும் புதிய பட்ஜெட்டில் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேரை விரைவில் கைது செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைக்கக் கூடாது எனப் பதிவுத்துறை அதிரடி…
சென்னையை அடுத்த சித்தலாம்பாக்கம் ஜெயாநகர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் - சரண்யா தம்பதியரின் மூத்த மகனான கணேஷ்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்த ஒரே வாரத்திற்குள், புதிய அரசு பல்வேறு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், பிற முன்னணி கட்சிகளிலிருந்து அடுத்தடுத்து பலரும்…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் புதிய 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், கடந்த மே 10-ஆம்…