பிக் பாஸ் நிகழ்ச்சியால் ட்ராப் அவுட் ஆனதா கமல் – H.வினோத் கூட்டணி..? உண்மை என்ன..?

By Archana on மார்கழி 27, 2023

Spread the love

அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் இருந்து அவர் வெளியேறிவிடுவார் கமல் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில், சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கினார் கமல். 4 வருடங்களுக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தை பிவிஆர் தியேட்டர் நிறுவனம் உட்பட பல தியேட்டர் நிறுவனங்கள் வெளியிடவே தயங்கிய நிலையில், அப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது. 4 வருடங்களுக்கு பிறகும் கூட அவருக்கு சினிமாவில் மாஸ் குறையவில்லை என்பது பட்ட பரிவர்த்தனமானது.

#image_title

அதனை தொடர்ந்து அவரது அடுத்த படைப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியன் படத்தின் 2-ம் பாகம் ஆரம்பித்து வருடங்கள் ஆகியும், விபத்து, இறப்பு பிற படங்கள் என விட்டு விட்டு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்திலும் கமிட்டாகி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதனை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அடுத்தப் படத்திற்கு ஓகே சொல்லி இருந்தார் கமல். ஆனால் தற்போது இந்தப் படம் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு முழு முதற் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது எனலாம்.

   
   

#bigg boss kamal

 

ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடைபெற்று வந்த பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி கடந்த 7 வருடங்களாக தமிழிலும் நடந்து வருகிறது. அதன் நிகழ்ச்சி தொகுப்பாளராக கமல் இருந்து வருகிறார். பணம் இல்லாததால் தான் அவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாகவும், இந்த மேடையை அவர் அரசியல் மேடையாக பயன்படுத்துவதாகவும் பல கூற்றுகள் சமூக வலைத்ளத்தில் பரவியது. இதற்கிடையில் இந்நிகழ்ச்சியை ரம்யாகிருஷ்ணன், சிம்பு என பலர் தொகுத்து வழங்கினாலும், கமல் தான் இதற்கு சரியான நபர் என நம்பப்படுவதால், 7-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.

#image_title

இந்த சீசன் முடிய இன்னும் 20 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில், அதன் பின் இந்தியன் 2 மற்றும் 3ம் பாகம், தக் லைஃப் போன்ற படங்கள் வரிசைக் கட்டி இருக்கும் நிலையில், அதன் பிறகு ஹெச்.வினோத்தின் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம் எனவும், ஆகையால் இந்த படம் ஒருவேளை தள்ளிப் போகலாம் இல்லையென்றால் நின்று கூட போகலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.