‘என் காதல் தோல்வி பத்தி தெரியணும்னா அந்த படத்தை பாருங்க’… தனது காதல் குறித்து முதன்முறையாக மனம் திறந்த நடிகர் S J சூர்யா..

By Begam on மார்கழி 27, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் தற்போது பயங்கர பிசியான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர்  எஸ் ஜே சூர்யா. நடிகர் அஜித்துக்கு ‘வாலி’ மற்றும் விஜய்க்கு ‘குஷி’ என இரண்டு முன்னணி ஹீரோக்களுக்கும்  ஹிட் படங்களை கொடுத்து  அவர்களை இயக்குனராக தூக்கிவிட்டவர் எஸ்.ஜே.சூர்யா. இதைத்தொடர்ந்து நியூ, அ ஆ, இசை போன்ற திரைப்படங்களை தானே  இயக்கி நடித்தார். ஆனால், இத்திரைப்படங்கள் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை.

#image_title

இதைத்தொடர்ந்து நடிகராக அவதாரமெடுத்த இவர், விஜய் நடித்த ‘மெர்சல் ‘படத்தில்  வில்லனாக நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தார். மேலும் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்திலும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மாநாடு படத்தின் வெற்றிக்கே அவர்தான் காரணம் என பலரும் கூறும் அளவுக்கு அவரின் நடிப்பு அசத்தலாக இருந்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் விஷால், எஸ் ஜே சூர்யாவின் கூட்டணியில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் இவரை ஒரு நடிப்பு அரக்கனாக இந்த உலகத்துக்கே காட்டியது.

   
   

Actor SJ Surya

 

தற்பொழுது தென்னிந்திய சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவராகவும் மாறிவிட்டார்  எஸ் ஜே சூர்யா. ஆனால் தற்பொழுது வரை இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்தே வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது காதல் தோல்வி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். அதில் அவர் கூறியிருந்தாவது, ‘அன்பே ஆருயிரே’ படக்கதையும் என் காதல் கதையும் ஏறக்குறைய ஒன்று தான். அதனால் தான் அந்த கதையை எடுத்தேன். என் காதல் தோல்வி பற்றி தெரிய வேண்டும் என்றால் அந்த படத்தை பாருங்கள்.

Actor SJ Surya

ஒரு இரவு விருந்துக்காக என் காதலி ஏற்பாடு செய்தார், அந்த நேரம் பெரிய தயாரிப்பாளரிடம் இருந்து போன் வந்தது, இப்போது ப்ரீயா இருக்கேன் உடனே வாருங்கள் என்றார். நான் காதலியிடம் அவசர வேலை என்று கூறி கிளம்பிவிட்டேன், இரவு 12 வரை மீட்டிங் இருந்தது. அதை முடித்துவிட்டு காதலியின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினேன். அப்போது அவள் இது ஒன்றும் சத்திரம் இல்லை என்று சொல்லி கதவை மூடிவிட்டார். அப்போது மூடிய என் இதயம் இப்போது வரை மூடியே இருக்கிறது’ என்று தனது காதல் தோல்வி குறித்து சோகத்துடன் மனம் திறந்து பேசியுள்ளார்.