“பிரசவத்திற்கு பின் வீங்கிய வயிறு…” ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து உறைந்த மருத்துவர்கள்… மருத்துவ உலகை உலுக்கிய பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 20, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்ட அரசு மருத்துவமனையில் சந்தியா சுராஜ் கெய்க்வாட் (19) என்ற இளம் பெண் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை முடிந்த 4 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

எனினும், வீட்டிற்குச் சென்ற சில நாட்களிலேயே சந்தியாவிற்குத் தாங்க முடியாத அளவுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவரது வயிற்றுப் பகுதியில் ஏதோ பொருள் இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

   

மேல் சிகிச்சைக்காகச் சந்தியா புனேவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அலட்சியமாகச் செயல்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கிளவுஸ்கள் மற்றும் பேப்பர் நேப்கின்களை அவரது வயிற்றினுள்ளேயே வைத்துத் தைத்தது வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது அந்த இளம் பெண் உயிருக்குப் போராடி வரும் நிலையில், அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது போலிஸார் விசாரணை மேற்கொண்டு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.