செல்லமாக நினைத்துத் தொடாதீங்க…! அணில் கடித்தால் என்ன ஆகும்…? அழகுக்கு பின்னால் ஆபத்து…! மருத்துவரின் திடுக்கிடும் எச்சரிக்கை…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

பார்க்க மிகவும் அழகாகவும் சுட்டித்தனமாகவும் இருக்கும் அணில்கள் உண்மையில் காட்டு விலங்குகளின் பட்டியலில்தான் சேர்க்கப்படுகின்றன. அழகாக இருக்கிறது என்பதற்காக அணில்களைப் பிடிக்க முயல்வதோ அல்லது காயப்படுத்த முயல்வதோ கூடாது; ஏனெனில் ஆபத்தை உணர்ந்தால் அவை தற்காப்பிற்காகக் கடிக்க வாய்ப்புள்ளது. அணில்கள் கடித்தால் எலிகளைப் போலவே ‘டெட்டனஸ்’ எனப்படும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஆபத்தான பாக்டீரியா தொற்றுகள் மற்றும் ‘லைம்’ நோய், ‘சால்மோனெல்லோசிஸ்’ போன்ற கடுமையான வயிற்றுப் உபாதைகள் மனிதர்களுக்குப் பரவக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒருவேளை அணில் கடித்துவிட்டால், உடனே அலட்சியம் காட்டாமல் கடித்த இடத்தை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஓடும் குழாய் நீரில் சோப்பு போட்டு நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு, காயத்தின் மீது கிருமிநாசினி பூசி பேண்டேஜ் போட்டுக்கொண்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ‘டிடி’ தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகும். வீடுகளில் குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகள் இருந்தால் அணில்களிடம் நெருங்க விடாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நோய்த்தொற்று அபாயங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.