சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். கட்சியில் இருந்து விலகி, முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்தவர்கள் இதுவரை வகித்து வந்த பொறுப்புகளுக்குப் புதிய நிர்வாகிகளை உடனடியாக நியமிக்குமாறு அவர் மாவட்டத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.
கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, பா.ஜ.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கா காலியாக உள்ள பதவிகளை விரைவாக நிரப்புவதன் மூலம் கட்சிப் பணிகளில் எந்தவிதத் தேக்கமும் ஏற்படாமல் தடுத்து, எதிர்கால அரசியல் நகார்களுக்குத் தயாராகும் பணியில் மாநிலத் தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
