மிருகத்தனமாக அடிக்கிறாரே…? வளர்ப்பு மகளை கண்மூடித்தனமாக தாக்கும் மருத்துவர்.. வேடிக்கை பார்க்கும் குடும்பத்தினர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஆனி 24, 2025

Spread the love

இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது மருத்துவர் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு மகளை கொடூரமாக அடிக்கிறார்.  ஆனால் அப்போது அங்கு இருந்த குடும்ப உறுப்பினர்கள் யாருமே எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாருமே அந்த குழந்தையை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சிறுமி தான் இருக்கும் அறையில் அங்கும் இங்கு ஓடி தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்.

ஆனால் மருத்துவர் தொடர்ந்து அந்த சிறுமியை அடிக்கிறார். குழந்தைகள் நல ஆணையம் இந்த வீடியோவை கவனத்தில் கொண்டு 7 நாட்களுக்குள் காவல்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது. அடித்ததற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை பார்த்த இணையவாசிகள் பலரும் “ஒரு அரக்கனை போல இருக்கிறார் .இவர் ஒரு மருத்துவர் அல்ல” என்றும், மனிதன் எப்படி இவ்வளவு மிருகத்தனமாக மாறுகிறான்? என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.