லப்பர் பந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சுவாசிகா குறித்து இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது லப்பர் பந்து படத்தில் நடித்த நடிகை சுவாசிகா ஒரு 13 வருடத்திற்கு முன்பு நடிப்பதற்காக முயற்சி செய்யும் பொழுது என்னை வந்து சந்தித்தார். அப்பொழுது நான் ஆடிஷன் பண்ணிவிட்டு ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இப்போது இந்த படம் பார்த்துவிட்டு அவர்களை தேடி கண்டுபிடித்து வாழ்த்தினேன்.
அப்பொழுது சார் என்னை ஞாபகம் இல்லையா? அப்பொழுது நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த டயலாக் கூட இன்னமும் ஞாபகம் இருக்கிறது என்று சொன்னார். கடந்த 13 வருடமாக அந்த பெண்ணினுடைய வாழ்க்கையில் கொஞ்சம் கூட தளர்ச்சி அடையாமல் தொடர்ந்து போராடி இருக்கிறார். பெண்களுக்கு பொதுவாக 20 -25 வயது ஆனால் பயம் வந்துவிடும். அப்படியெல்லாம் இல்லாமல் சரியான கதாபாத்திரம் வரும் போது பிரதிபலிக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்” என்று கூறியுள்ளார்.
