2026 சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக அணியினர் மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கமாக இழுத்து வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் சேலம், ராணிப்பேட்டையில் மாற்றுக் கட்சியினர் சுமார் 1,000 பேர் அதிமுகவில் இணைந்தார்கள். இந்த நிலையில், குமரியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சுமார் 50 பேர் திமுகவில் இணைந்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 3ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்திருந்தார். விக்ரவாண்டியில் முதன்முதலாக மிகப்பிரம்மாண்டமான மாநாட்டையும் நடத்தினார். மேலும் கட்சியின் சார்பாக மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பண்டிகை தின வாழ்த்துக்கள் என ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்க, மறுப்பக்கம் இன்னும் அரசியல் களத்தில் வேரூன்றாத தமிழக வெற்றி கழகத்தோடு சற்று ஆதரவு மற்றும் நட்பு நிலைப்பாட்டையே பெரும்பாலான கட்சிகள் முன்னெடுத்து வருகிறது. இது விஜயின் அரசியல் வருகையின் மீது பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
