டியூட்டிக்கு வந்த நர்ஸ்…! இரவில் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டர்… ஜெயிலுக்கு போய் வந்த அடுத்த நாளே…. இளம் பெண்ணின் பரபரப்பு புகார்…!!

By Devi Ramu on புரட்டாதி 21, 2025

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இவரது கணவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்த கவிதாவுக்கு இரவு பகல் என மாறிமாறி பணி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் மதனகோபால் என்பவர் கவிதாவுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.

இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து கவிதா தனது கணவரிடம் கூறியதும், அவர் வேலைக்கு செல்ல வேண்டாம் என சொன்னதாக தெரிகிறது. இருப்பினும் மதனகோபால் கவிதாவுக்கு ஆடியோ மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு அளித்துள்ளார்.

   

இதனால் கவிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதனகோபால், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அமுதவல்லி, உறவினர்கள் சிவஞானம், மோகன் ஆகியோரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த மறுநாள் மதனகோபால் மீண்டும் கவிதாவை மிரட்டியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.