சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இருக்கும் இந்த சிறு பையன் யாருன்னு தெரியுமா?… இவர் ஒரு பிரபல நட்சத்திரமா!….

By Begam

Published on:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிகர் ஜீவா சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இளம் நடிகர்களில் ஒருவர் ஜீவா இவரின் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் மகன் என்ற அடையாளத்தோடு 2003 ஆம் ஆண்டு ‘ஆசை ஆசையாய்’ என்ற படம் மூலம் அறிமுகமானார் சிவா இதை தொடர்ந்து இவர் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

   

ஜீவா படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுடன் மிகவும் ஜாலியாக பேசி பழகுபவர். அவர் இருந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும் என்று நடிகர்கள் பலரும் கூறுவர். ஒரு நடிகர் முன்னணி நாயகனாக வலம் வர வேண்டும் என்றால் பல கட்டங்களை தாண்டி வர வேண்டும் அப்படி சினிமா உலகில் அத்தகையிடத்தை அடைய தற்போது வரையில் போராடிக் கொண்டுள்ளார் நடிகர் ஜீவா.

இவர் நடிப்பில் வெளியான ராம், சிவா மனசுல சக்தி, தெனாவட்டு, நீதானே பொன்வசந்தம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இவர் அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சரிவை சந்திக்க ஆரம்பித்தார்.

இதற்கு காரணம் இவர் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காதது என கூறப்படுகிறது.இவர் 2007 இல் சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. நடிகர் என்பதையும் தாண்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாக வலைத்தளங்களில் முன்னணி நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜீவா சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…