#image_title
கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மூத்த நடிகராகவும் திகழ்பவர். தானது ஐந்து வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் கமல்ஹாசன். கிட்டதட்ட 65 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார் கமல்ஹாசன்.
1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் 5 வயதாக இருக்கும்போது குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கமல்ஹாசன் தொடர்ந்து பட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் 1973 ஆம் ஆண்டு அரங்கேற்றம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் கமல்ஹாசன். அதற்கு பிறகு அவர் நடித்த வெற்றி படங்கள் கணக்கில் அடங்காதவை. என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அற்புதமாக நடிப்பவர் கமலஹாசன்.
இவரது அபாரமான நடிப்பிற்காக பல தேசிய விருதுகள், தமிழக மாநில விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன், கலைமாமணி, செவாலியர் போன்ற பல விருதுகளை வைத்திருக்கிறார். கமலஹாசன் தமிழ் மட்டுமல்லாது இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் வங்காளம் போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருந்திருக்கிறார் மற்றும் தமிழ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து இருக்கிறார் கமல்ஹாசன்.
இவரது நடிப்பு திறமையை பார்த்த மக்கள் இவருக்கு உலகநாயகன் கமலஹாசன் என்ற பட்டம் அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று கமலஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் கலையை விடவும் கலைஞன் பெரிதல்ல. நான் இன்றைக்கும் ஒரு மாணவன் தான் அதனால் என்னை உலகநாயகன் என்று அழைக்க வேண்டாம். கமல்ஹாசன் என்றோ அல்லது KH என்றோ அழைத்தாலே போதுமானது என்ற அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இதையே திரை உலகம் முழுவதும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த உலக நாயகன் பட்டத்தை அவருக்கு வழங்கியது யார் என்பதை பற்றி உங்களது தெரியுமா?
1980 களில் இருந்து 1990 2000 காலங்களில் மிகவும் புகழின் உச்சியில் இருந்த கமலஹாசன் 2000 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தெனாலி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த தென்னாலியின் பட டைட்டில்தான் உலகநாயகன் கமலஹாசன் என்று முதன் முதலாக போடப்பட்டது. இந்த பட்டத்தை அவருக்கு வைத்தது இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் தான். அதற்குப் பிறகு இவரது நடிப்பிற்கு இந்த பட்டம் பொருந்தியதுதான் என்று மக்களும் ஏற்றுக் கொண்டனர்.
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…