இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால் உணவு பழக்க வழக்கங்களும் வெகுவாக மாறியிருக்கிறது. அதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இளம் வயது மரணங்கள் பலவிதமான நோய்கள் என ஒவ்வொரு நாளும் வருவதை நாம் பார்த்திருப்போம். அதனால் நம் வாழ்க்கை முறை மாற்றங்களை உணவு பழக்க வழக்கங்களை மாற்றி ஆக வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு சில விஷயங்களை பார்த்து பார்த்து செய்யும்போது நம் உடல் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு நோய் நொடி இல்லாமல் இருக்க முடியும். இதில் ஒன்றுதான் எந்த நிலையில் தூங்க வேண்டும் என்பது அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கு எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.
நல்ல தூக்கம் இருந்தால்தான் மறுநாள் காலை எழுந்திருத்து அன்றாட பணிகளை நம்மால் சுறுசுறுப்பாக செய்ய இயலும். அப்படி நான் தூங்கும் போது கண்டிப்பாக இடது புறமாக தூங்க வேண்டும். அதாவது உங்கள் இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் இருக்கும்படி இடது புறமாக தூங்க வேண்டும்.
இடது பக்கமாக தூங்கும்போது உணவு குழாய்களில் இருக்கும் அமிலம் மேல் பக்கமாக செல்வது தடுக்கிறது. இது சரியாக ஜீரணம் ஆகுவதற்கும் உதவும் மற்றும் மூளைக்கும் இது நல்லது. இது மட்டுமில்லாமல் குப்புறப்படுத்தும் வெகு நேரம் தூங்க கூடாது. சாப்பிடுவதற்கும் தூங்க செல்வதற்கும் இடைவெளியாக ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.