‘உலக அழகி ‘நடிகை ஐஸ்வர்யா ராய் இவரைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானவர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் நிராகரித்த ரூபாய் 4000 கோடி வசூல் செய்த படங்கள் குறித்து என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹம் தே சுகே சனம் மற்றும் தூம் 2 ஆகிய இரண்டு சிறந்த படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். ஆனால் அவர் இரண்டு படங்களைய நிராகரித்தார். இரண்டு படங்களில் ஒன்று 2005 இல் உலகம் முழுவதும் 487.3 மில்லியன் டாலர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4512 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஐஸ்வர்யாராய் இந்த படத்தை நிராகரித்ததற்கு காரணம் .அதில் சில நெருக்கமான காட்சிகள் இருந்ததாகவும் அந்த காட்சிகளின் நடிக்க சங்கடமாக உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
![]()
இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக ஹாலிவுட் சிறந்த நடிகைகளில் ஒருவரான ஏஞ்சலினா ஜோலி இது நடித்தார். மேலும் அவர் அந்த படத்தில் சிறப்பாக நடித்த இந்த படத்தின் பெயர் மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஸ்மித். இந்த படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தில் பிராட்பிட்டின் ஜோடியாக டிராய் படத்தையும் ஐஸ்வர்யாராய் நிராகரித்தார்.
![]()
தயாரிப்பாளர் அவரிடம் ஒன்பது மாதங்கள் படப்பிடிப்புக்கு கேட்டாராம். கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த வாய்ப்பும் கைநழுவி போயுள்ளது. 2004 ஆம் வருடம் அதிகம் வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்றாகும். இது பாக்ஸ் ஆபிஸில் 497.4 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 4198.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
