சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோசனை ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்து படக்குழு தொடங்கிவிட்டது. அது மட்டுமல்லாமல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து தான் எங்கு பேசினாலும் பெரும் நம்பிக்கையோடு பேசி வந்தார்.

இதனை பலரும் ஓவர் பில்டப்பாக பார்த்த நிலையில் படம் 2000 கோடிகளை அசால்டாக வசூல் செய்யும் என்றும் படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது எனவும் கூறினார்கள். பாலிவுட்டில் இந்த படத்தை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறார்கள். சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தான் உருவாகியுள்ளது என ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து படத்திற்கு பில்டப் கொடுத்து வந்தனர். சென்னை தொடங்கி மலேசியா வரை படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றது. இப்படியான நிலையில் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை படம் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேவையான அளவுக்கு மட்டும் பிரமோஷன் பண்ணிட்டு அமைதியா இருந்தா சுமார் படம் நல்ல வசூல் ஆகும். நல்ல படம் பெரிய ஹிட் ஆகும். உதாரணம் லப்பர் பந்து மற்றும் அமரன். ஓவர் பில்டப் தந்தா பல தமிழ் படங்கள் படுதோல்வி அடைந்தது தான் வரலாறு. உதாரணம் இந்தியன் 2. கங்குவா நிலை என்னவாகும் என்பது இனி தான் தெரியும்.

இனிமேலாவது ஹாலிவுட் ரேஞ்ச் என்று சொல்வதை நிறுத்துங்க. ஜூராசிக் பார்க், அவதார், டைட்டானிக், லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற படங்களின் பொருட்செலவு, தொழில்நுட்ப நேர்த்தியை தொடுவது மிகக்கடினம். அதை நாம் தொடும்போது. அவர்கள் மேலும் பலமடங்கு முன்னேறி இருப்பார்கள். அட்லீஸ்ட், அந்த வாயை வச்சிட்டாவது சும்மா இருங்க. Waiting for .. 200, 500,1000,2000 கோடிகள் வடை என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
