தினமும் காலையில் நாம் தூங்கி எழுந்தவுடன் நல்ல விஷயங்களை நினைத்துக் கொண்டு நமக்கு பிடித்தமான தெய்வத்தை வணங்கி கொண்டு விழிக்கும் போது அன்றைய நாள் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நாம் கண்விழிக்கும் போது பார்க்கக்கூடிய முதல் பொருளும் நல்லவைகளாக இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி காலையில் கண்விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது என்பதை பற்றி இனி காண்போம்.
நம் உள்ளங்கையில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்று கூறப்படுகிறது. அதனால் காலையில் கண்விழிக்கும் போது நம் உள்ளங்கையை பார்ப்பது நல்லது. தூங்கி எழுந்தவுடன் சுவாமி படங்களை பார்ப்பார்கள் அதுவும் நல்லது தான். நம் வீட்டிற்கு பக்கத்தில் ஏதாவது கோவில் இருந்தால் காலையில் கோவில் கோபுரத்தில் கண்விழிப்பது மிகவும் நல்லது.
உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அம்மா, அப்பா, மனைவி குழந்தைகள் யார் முகத்தில் விழித்தாலும் அதுவும் நல்லது தான். மேலும் காலையில் தூங்கி எழும்பொழுது சூரியனை தரிசனம் செய்வது மிகவும் சிறந்தது. அடுத்ததாக வயல்வெளிகள், சிவலிங்கம், பசுமாடு, மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் ஆகியவற்றில் தூங்கி எழும்பும்போது கண் விழிக்கும் போது மனதிற்கும் உடலுக்கும் உற்சாகம் தந்து அன்றைய நாள் பாசிட்டிவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தூங்கி கண் விழிக்கும்போது எதை பார்க்க கூடாது என்று சாஸ்திரப்படி கூறப்படுவது உடைந்த கண்ணாடி, ஓடாத கடிகாரம், கொழுந்து விட்டெரியும் நெருப்பு, கோபத்தோடு திட்டிக் கொண்டிருக்கும் போது ஆகியவற்றில் கண் விழிக்க கூடாது என்பது நினைவில் கொள்ளுங்கள்.