தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான மைல்கல் திரைப்படமாக கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது பருத்தி வீரன் திரைப்படம். இந்த படத்தில் அறிமுகமான கார்த்தி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். அந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றனர், அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும்.
ஆனால் பட இந்த பட ரிலீஸூக்குப் பிறகு படத்தில் பணியாற்றிய கலைஞர்களாக அமீர், கார்த்தி மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணமாக இயக்குனர் அமீருக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை தராமல் ஞானவேல் ராஜா ஏமாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது.

#image_title
இந்த விவகாரம் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகப்பெரிய வைரலாக இருந்த விஷயம் பருத்திவீரன் தயாரிப்பு குறித்த விவகாரத்தில் அமீர் – ஞானவேல் ராஜா பிரச்னை தான். இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்பது குறித்து இயக்குநர் அமீர் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பல விஷயங்களை கூறியிருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அமீருக்கு ஆதரவாக நின்று, ஞானவேல் ராஜாவை விமர்சித்தனர்.
இந்நிலையில் ஞானவேல் ராஜா அளித்த ஒரு பேட்டியில் இயக்குனர் அமீரை விமர்சிக்கும் விதமாக சில கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். அதில் “கார்த்திக்கு முதலில் அமீர் இயக்கத்தில் நடிக்க நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அமீர் இயக்கிய ராம் படத்தை நான், கார்த்தி மற்றும் சுதா கொங்கரா ஆகியோர்தான் சென்னையில் பார்த்தோம். அந்த படம் சுதா கொங்கராவுக்கும் பிடிக்கவில்லை. கார்த்திக்கும் பிடிக்கவில்லை.

#image_title
அப்பொதே கார்த்திக்கு 27 வயது ஆகிவிட்டது. அதனால் அவர் நல்ல படத்தில் நடிக்கவேண்டும் என ஆசைபட்டார். அப்போது இயக்குனராக அமீர் மேல் அவருக்கு நம்பிக்கை இல்லை. அதன் பின்னர்தான் நாங்கள் எல்லாம் சொன்னதும் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.” எனக் கூறியுள்ளார்.
