புது ட்ரிக்… உடனே கூகுளில் ’67’ என டைப் பண்ணுங்க… பிறகு நடப்பதை நம்பவே மாட்டீங்க…!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

நீங்கள் உங்களுடைய போனில் கூகுளில் 67 என்ற நம்பரை தேடினால் உங்களுடைய திரையில் ஒரு மேஜிக் நடக்கும். இந்த ட்ரெண்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அனைவரும் இந்த புதிய ட்ரிக்கை தங்களுடைய மொபைல் அல்லது லேப்டாப்பில் செய்து பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். அதாவது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் கூகுளை திறந்து 67 அல்லது 6-7 என்று டைப் செய்து என்டர் செய்தால் போதும் சில வினாடிகளில் உங்களுடைய செல்போன் மற்றும் லேப்டாப் ஸ்க்ரீன் சற்று ஷேக் ஆகும்.

இதனைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். செல்போன் அல்லது லேப்டாப்பில் பிரச்சனை என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு google தந்துள்ள சர்ப்ரைஸ் மட்டுமே. இதனால் உங்களுடைய செல்போன் மற்றும் லேப்டாப்புக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

அதேபோல google-ளின் மற்றொரு பிரபலமான ட்ரிக் “டூ எ பேரல் ரோல் ” ஆகும். அதன்படி google-யில் Do a barrel roll என்று டைப் செய்தால் உங்கள் திரை முழுவதுமாக 360 டிகிரி சுழன்று பழைய நிலைக்கு வரும். இதனைப் பார்ப்பதற்கு ஏதோ தொழில்நுட்ப கோளாறு போல தோன்றினாள் இதுவும் google-ன் பிரபலமான மற்றும் சுவாரசியமான அம்சங்களில் ஒன்று. இதனை பயனர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.