bitcoin

ஒரு Bitcoin இன் தற்போதைய மதிப்பு இந்திய ரூபாயில் இத்தனை லட்சமா…? அதற்கு காரணம் டொனால்ட் டிரம்பா…?

By admin on கார்த்திகை 14, 2024

Spread the love

பிட்காயின் என்பது எண்ணிமை நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த பிட்காயினை வைத்து வலைத்தளங்களில் ஒருவருக்கு ஒருவர் பொருள் வாங்கலாம் சேமித்துக் கொள்ளலாம். இந்தச் சந்தையை கிரிப்டோ கரன்சி மார்க்கெட் என்று கூறுவர்.

   

இந்த பிட்காயினை வைத்து சட்டத்திற்கு புறம்பான பணப்பரிமாற்றங்கள் நடப்பதால் இந்த பிட்காயின் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. ஆனால்ந்த சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சி மார்க்கெட் அதிவேகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அமெரிக்க தேர்தல் ஏற்பட்ட முதலில் பிட்காயின் க்ரிப்டோ கரன்சி சந்தை போன்றவைகளின் கவனம் அங்கு தான் இருந்தது. ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் வாக்குறுதிகளில் கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயினின் விலையை உயர்த்துவதாகக் கூறியிருந்தார்.

   

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து பிட்காயின் விலை 81 ஆயிரம் டாலரை எட்டி சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த பிட்காயின் விலை ஒரு லட்சம் டாலர் வரை செல்லலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

இந்திய மதிப்பில் இந்த ஒரு பிட்காயின் விலை 75 லட்சம் ரூபாய் ஆகும். டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து உலகத்தின் கவனம் முழுதும் அமெரிக்காவைதான் நோக்கி இருக்கிறது. கிரிப்டோகரன்சியின் தலைமையாக அமெரிக்காவை மாற்றப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இன்னும் இது எந்த அளவுக்கு எட்டும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.