நடிகை சாய் பல்லவியின் கிரஷ் இந்த நடிகரா…? அவரோட கண்ணுக்கு அடிமையாம்…. யார் தெரியுமா..?

By Soundarya on கார்த்திகை 14, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னி நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரியில் படுகா குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சாய் பல்லவி. பள்ளி படிப்பை முடித்த பின்பு மருத்துவத்தில் சேர்ந்து மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்றார் சாய் பல்லவி. மருத்துவர் ஆனாலும் டான்சர் ஆக வேண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறுவயதில் இருந்து ஆர்வம் இருந்தது.

   

இதனையடுத்து மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை சாய் பல்லவி. அந்தத் திரைப்படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். படத்தில் அவரை பார்த்த பலரும் இந்த நடிகைக்கு இதுதான் முதல் படமா என்று ஆச்சரியப்படும் வகையில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

   

 

இவர் ஒரு சிறந்த நடிகை என்பது மட்டுமல்லாமல் சிறந்த டான்ஸரும் கூட. விஜய் டிவியில் நடந்த நடனம் தொடர்பான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட அவர் போட்டியாளராக பங்கேற்றார். பிறகு சினிமாவுக்குள் நுழைந்தார். போலிகளை உடைத்த நாயகி. இறுதியாக சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்த இந்து கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

இந்த நிலையில் சாய்பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சூர்யாவுடன் NGK படத்தில் நடித்த அனுபவம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.  அப்போது சாய் பல்லவியின் கிரஷ் சூர்யா தான் என்று தெரிவித்துள்ளார். அதாவது அவருடைய ஆல் டைம் கிரஷ் என்றால் அது சூர்யா  தானாம். NGK படத்தில் நடிக்கும் பொழுது சீரியஸான காட்சிகள் எல்லாம் வரும். இந்த சீரியஸான காட்சிகளில் கூட அவரோட கண்கள் ரொம்பவும் சாந்தமா  இருக்கும். அந்த அளவுக்கு அவருடைய கண்கள் ரொம்பவே அழகாக இருக்கும் என கூறி உள்ளார்.