நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூரரைப் போற்று திரைப்படம் வெளியானது. பல்வேறு எதிர்பார்ப்பிற்கு இடையே ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளியது. இப்படத்தில் நடிகர் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

#image_title
தேசிய விருதில் சூரரைப் போற்று சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை மற்றும் பின்னணி இசை என ஐந்து விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த திரைப்படம்- சூரரைப் போற்று
சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்காக விருது அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த பின்னனி இசைக்கான விருது ஜி. வி. பிரகாஷ் குமார்க்கும், சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கராவுக்கும் கிடைத்தது.

#image_title
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யாசூரரை போற்று படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது குறித்து பேசியுள்ளார். அதாவது, ரொம்ப உறுதியா இல்ல. என்ன பண்ண போறோம்னு தெரியல. ஆனா தியேட்டர்ல வரணும்னு முக்கியமா இருந்துச்சி. ஒரு 5 இயக்குனர்கள் வாழ்வாதாரம் எல்லாமே அதை நம்பி இருந்துச்சி.

#image_title

#image_title
எல்லோருடைய நன்மையையும் பாக்க வேண்டியதா இருந்துச்சி. செல்பிஷ் ஆ எனக்கு யோசிக்க முடியல. அதனால் தான் அப்படி நடந்துச்சு. அப்போ எடுத்த முடிவு தான். நல்லது கெட்டது வெளில இருந்து பாக்குறவங்களுடைய பார்வையில இருக்கும். நல்லதும் நடந்தது வருத்தமும் நடந்தது என்று கூறியுள்ளார்.
