singapore

உலகிலேயே 100 வயது வரை வாழும் அதிகமான மக்களை கொண்டு சிங்கப்பூர் முதலிடம்… அதன் ரகசியம் என்ன தெரியுமா…?

By admin on மார்கழி 31, 2024

Spread the love

மக்கள் எல்லோருக்கும் நீண்ட ஆயுளோடு வருங்கால சந்ததியுடன் தனது நாட்களைக் கழித்து ஆண்டு அனுபவித்து செல்ல வேண்டும் என்பது தான் விருப்பமாக இருக்கும். முந்தைய காலகட்டத்தில் நூறு வயது என்பது சாதாரணமாக எல்லோரும் கடக்க கூடியதாக இருந்தது. அப்படி இல்லையேல் 80, 85 வரை வரையாவது வாழும் நம் தாத்தா பாட்டிகளை நாம் பார்த்திருப்போம். இன்றைய உணவு பழக்கம் வாழ்க்கை முறை மாற்றத்தினால் 50 வயதை கடப்பதே பெரிய விஷயமாக தான் தோன்றுகிறது. ஏனென்றால் அத்தகைய நோய்கள் இளம் வயது மரணங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

   

இது மாற வேண்டும் என்றால் மனிதர்களின் வாழ்க்கை முறையும் உணவு பக்கவழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் சிங்கப்பூர் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது. சமீபத்திய ஆய்வில் 86 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடும் என்று சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளை கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் 2010 முதல் 2020 வரை சிங்கப்பூரில் நூறு வயது தாண்டிவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியிருக்கிறது. அப்படி சிங்கப்பூர் மக்கள் என்னதான் செய்கிறார்கள்? அதிக வயதுடைய மக்கள் வாழும் இடமாக சிங்கப்பூர் முதலிடம் பிடித்ததற்கான ரகசியம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

சிங்கப்பூர் அரசின் திட்டமிடப்பட்ட கொள்கைகள் முதலீடு காரணமாக தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமான மக்கள் வாழும் பகுதியை “ப்ளூ சோன்” என்று கூறுகிறார்கள். உலகத்தில் ப்ளூ சோன்” பட்டியலில் சிங்கப்பூரை ஆறாவதாக இணைத்திருக்கிறார்கள். கலாச்சாரம், வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சமுதாயம் போன்ற அம்சங்களின் கூட்டு விளைவாக அதிக காலம் ஆரோக்கியமா மக்கள் வாழும் பகுதிகள்தான் “ப்ளூ சோன்” என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 10 ஆண்டுகளில் இந்த “ப்ளூ சோன்” பட்டியலில் இடம் பெற்ற முதல் நாடு சிங்கப்பூர் ஆகும். சிங்கப்பூரில் மக்கள் ஆயுட்காலம் நீடிப்பதற்கு அவர்கள் முன்னோக்கி சிந்திக்கும் கொள்கைகளே காரணம் என்றும் கூறுகிறார்கள். எத்தனை ஆண்டுகள் வாழ்கின்றனர் என்பதோடு எவ்வளவு தரமான வாழ்க்கையை இவர்கள் வாழ்கிறார்கள் என்பது முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆரோக்கியமான நீண்ட ஆயுட்காலத்தை பெரும் வாழ்க்கை முறையை சிங்கப்பூர் மக்கள் எவ்வாறு பெற்றார்கள் என்பதை அவர்களே கூறியிருக்கிறார்கள்.

மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்களில் அந்நாட்டின் அரசு பக் கொள்கைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சிகரெட் மற்றும் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கடுமையான விதி, பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை என்ற அரசு எடுத்த பல முன்னெடுப்புகள் தனி நபர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சிங்கப்பூர் நாட்டின் அரசாங்கத்துக்கு உரிய ஆரோக்கிய மேம்பாட்டு வாரியம் மக்கள் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற தரமான உள்ளூர் உணவுகளை உட்கொள் அவற்றை வளப்படுத்த தேவையான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறதாம்.

உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை பட்டியலிடுதல் கட்டாயமாகப்பட்டிருக்கிறது. மேலும் குளிர்பானங்களில் சர்க்கரை அளவை குறைக்கவும் அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணங்களால் பொது ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுகளில் மக்களுக்கு அதிக மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இத்தகைய மாற்றங்களால் ஆரோக்கியம் மற்றும் சுகாதார சேவைகளை அனுகுவதற்கான சிறந்த நாடு என்ற பெயரை பெற்றிருக்கிறது சிங்கப்பூர். அது மட்டுமில்லாமல் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதையும் சிங்கப்பூர் அரசாங்கம் உறுதி செய்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு அரசாங்கமும் முன்னெடுப்புகளை எடுத்தால் கட்டாயம் அந்த நாட்டில் மாற்றம் நிகழும் என்பது தெரிகிறது. இது போலவே மற்ற நாடுகளும் ஒரு சில திட்டங்களை கொண்டு வந்தால் மக்கள் நலமோடு வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.