விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் போட்டி போட்ட நிலையில் அதில் 14 போட்டியாளர்கள் எவிக்ஷன் ஆகி வெளியேற்றப்பட்டுள்ளன. இன்னும் பத்து போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். தற்போது பினாலே டாஸ்க் நடந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே சமீபத்தில் 74 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் வீட்டில் பயணித்த ரஞ்சித் வெளியேற்றப்பட்டார். இது இவர் செய்த பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக வயதுள்ள போட்டியாளர்கள் தான் முதலில் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் இந்த சீசனில் அதிக வயதுடைய ரஞ்சித் அதிக நாட்கள் இருந்துள்ளார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ரஞ்சித் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், பிக்பாஸ் வீட்டில் இருந்த வரைக்கும் நான் ரொம்ப மகிழ்ச்சியாக தான் இருந்தேன். அங்க நடிக்கிறதுக்கு அது ஒன்னும் சினிமா கிடையாது. நான் என்னுடைய உண்மையான முகத்தோடு தான் இருந்தேன். நான் சினிமாவுல நிறைய படங்களில் கோபத்தோட நடிச்சிருக்கேன்.
ஆனா பிக் பாஸ் வீட்டுக்குள்ள எனக்கு எந்த கோபமும் வரல. ஏனென்றால் அங்கு நடக்கிற எல்லாமே நான் சகஜமா எடுத்துகிட்டேன். ஒரு சக்கர உப்புக்காக யாராவது சண்டை போட்டா கூட எதுக்கு இதுக்காக சண்டை போட்டுட்டு இருக்காங்க என்று தான் யோசிச்சேன். ஒருவேளை போட்டியாளர்கள் அப்படி சண்டை போட்டாலும் ஒரு 20 நிமிஷத்துல அவங்களே நார்மல் ஆகி பேசிட்டு இருப்பாங்க. அங்க நான் கோபப்படுற மாதிரி எந்த ஒரு விஷயமும் நடக்கல. பல லட்சம் பேர் இந்த நிகழ்ச்சியை பார்த்துட்டு இருக்காங்க. குழந்தைங்க மற்றும் படிக்கிற பசங்க என நிறைய பேர் பார்க்குறாங்க. அவங்க முன்னாடி நான் என்ன பைத்தியக்காரன் மாதிரி காட்டிக்க விரும்பல. தேவையில்லாத ஒரு விஷயத்துக்கு சண்டை போட்டு இன்னும் ஒரு வாரம் இந்த வீட்ல தாக்கு பிடிக்கலாம் என்ற எண்ணம் எனக்கு வரல.
அதேசமயம் பிக் பாஸ் வீட்டில் நான் பார்த்த போட்டியாளர்களில் சிறந்தவர்கள் யார் என்றால் அருண், முத்துக்குமார் மற்றும் பவித்ரா தான். இவர்களில் யாராவது தான் டைட்டில் வின் பண்ணுவாங்க என்று நான் நினைக்கிறேன். அருண் ஒரு விஷயத்தை பக்குவமாக புரிந்து கொண்டு நன்றாக விளையாடிக் கொண்டிருக்கின்றார். அதனைப் போலவே பெண் போட்டியாளர்களில் பவித்ராவும் சிறந்த போட்டியாளராக உள்ளார். இவர்களின் யாராவது தான் டைட்டில் வின் பண்ணுவாங்க என்பது என்னுடைய கருத்து என ரஞ்சித் பேசியுள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க