‘கொழு கொழுன்னு டு ஸ்லிம்’ குஷ்புவின் பிட்னெஸ் சீக்ரெட் உங்களுக்கு தெரியுமா?…அவுங்களே சொன்ன விஷயம் நீங்களே பாருங்க…

By Begam on ஐப்பசி 4, 2022

Spread the love

நடிகை குஷ்பு 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இன்றும் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 1989 ஆம் ஆண்டு வெளியான ‘வருஷம் 16’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பு.சமீபத்தில் நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பு நடித்திருந்தார்.

   

ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார் என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கலக்கினார் நடிகை குஷ்பு. சினிமா, அரசியல், சின்னத்திரை என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் நடிகை குஷ்பூ. கொரோனா காலத்தில் போடப்பட்ட லாக்டவுடனை பயன்படுத்தி தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் நடிகை குஷ்பூ.

   

 

 

தான் உடல் எடையை குறைக்க முக்கிய காரணமாக இவர் கொரோனா தொற்றை குறிப்பிட்டுள்ளார். அனைத்து வீட்டு வேலைகளையும் செய்வது ,  யோகா, மெடிடேஷன் என கொரோனா லாக்டவுடனை பயன்படுத்தி உடல் எடையை குறைத்தாராம். ‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகவே இல்ல’  என்பதை போல இன்றும் அதே அழகுடன் ஜொலிக்கிறார் நடிகை குஷ்பூ.