தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சினிமா பின்புறம் இல்லாத குடும்பத்தில் இருந்து வருந்து மெல்ல அடி எடுத்து வைத்து ஹீரோக்களுக்கு இணையாக தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக உயர்ந்திருக்கிறார் நயன்தாரா. நடிகைகள் என்றாலே அவர்களை சுற்றி சர்ச்சைகள் இருக்கும். அப்படி நயன்தாராவும் தனது சினிமா பயணத்தில் பலவித சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். அவை என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

முதலில் நயன்தாரா சிக்கிய சர்ச்சை என்னவென்றால் சிம்புவுடன் ஆன காதல். வல்லவன் திரைப்படத்தில் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடித்தனர். அப்போது இருவரும் காதலிக்கிறார்கள் என்று அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட வெளியானது. அதற்கு அடுத்ததாக இருவரும் பிரேக் அப் செய்து விட்டார்கள்.
அதற்கு அடுத்ததாக நயன்தாரா சிக்கிய சர்ச்சை என்னவென்றால் சிம்புவை தொடர்ந்து ஏற்கனவே திருமணம் ஆன நடன அமைப்பாளர் மற்றும் நடிகரான பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் அவரை எப்படி இவர் காதலிக்கலாம் ஒரு குடும்பத்தை எப்படி கெடுக்கலாம் என்ற அளவுக்கு பல பிரச்சனைகளில் சிக்கி இருந்தார் நயன்தாரா. அந்த நேரத்தில் பிரபுவின் பெயரை தன் கையில் பச்சை குத்தியிருந்தார். அந்த அளவுக்கு தீவிரமாக காதலித்து வந்தார் நயன்தாரா. இதுவும் ஒரு சில காலத்துக்கு பிறகு பிரேக்கப் ஆனது.
அடுத்ததாக நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்திற்காக விருது வாங்க மேடை ஏறிய போது அங்கு விருது வழங்க வந்த அல்லு அர்ஜுனனின் கையால் விருது தாங்காமல் தவிர்த்து விக்னேஷ் சிவன் கையினால் விருது வாங்கினார். இதனால் அல்லு அர்ஜுன் நயன்தாராவுடன் நடிக்கவே கூடாது என்ற முடிவெடுத்துவிட்டார் என்ற செய்திகளும் வெளியானது.
அடுத்ததாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது இவர் திருப்பதிக்கு சென்றார். திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு செல்லும் போது அங்கு எடுத்த புகைப்படத்தில் இவர் காலணி அணிந்தது சர்ச்சைக்கு உள்ளானது.
திருமணம் முடிந்த ஐந்தாவது மாதத்திலேயே இருவரும் தந்தை தாய் ஆகி விட்டோம் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இருக்கிறது என்று அறிவித்திருந்தனர். திருமணம் முடிந்த உடனே எப்படி குழந்தை பிறந்தது என்று கேள்வி கேட்டு அந்த நேரத்தில் இது பெரிய சர்ச்சையாக ஓடிக் கொண்டிருந்தது. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டோம் என்று நயன்தாரா விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தாலும் மேலும் மேலும் இது பிரச்சினை அந்த நேரத்தில் வளர்ந்தது.

வாடகை தாயின் மூலம் ஒரு தம்பதி குழந்தை பெற வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் திருமணம் ஆகி 5 வருடங்களை நிறைவு செய்திருக்க வேண்டும் இருவர் உடலில் ஒருவருக்கு ஏதாவது குறை இருந்தால் தான் அப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என பல ரூல்ஸ்கள் இருக்கிறது. இதனால் நயன்தாரா சிறைக்கு செல்ல கூட வாய்ப்பு இருக்கிறது என்ற அளவுக்கு சர்ச்சைகள் வெளியாகின.
நயன்தாரா சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் அவரது முகம் வேற மாதிரி இருக்கும். தற்போது அவருடைய முகத்தின் வடிவம் வேற மாதிரி இருக்கும். இதனால் நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் அழகாக இருக்க ஏதாவது முகத்திற்கு செய்திருக்கிறார் என்று பல சர்ச்சைகள் வெளியாகின. இதற்கு ஓப்பனாகவே நயன்தாரா பதிலளித்தார். பிளாஸ்டிக் சார்ஜரி நான் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். இதற்கு அடுத்தாக தற்போது தனுஷ் உடனான காப்பிரைட் விவகாரத்திலும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நயன்தாரா.
தனுசிடம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் பகத் பாஸில் படத்தில் பயன்படுத்தப்பட்ட கரிங்காலியல்லே ஆல்பத்தை தனது பிசினஸுக்கு பயன்படுத்தியதற்காக அந்த ஆல்பத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தனுஷ் இடம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் இதே பிரச்சினையில் சிக்கி இருக்கிறார் நயன்தாரா. இதுபோல பல சர்ச்சைகளில் சிக்கி இருப்பதால் இவரை கான்ட்ரவர்ஸி குயின் நயன்தாரா என்று அழைக்கின்றனர்.
