எம் ஜி ஆர் இறப்பதற்கு முன் கடைசியாகப் பார்த்த படம் இதுதான்… அப்போதும் குறையாத உதவும் பண்பு!

By vinoth on கார்த்திகை 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.

பல வருட போராட்டத்துக்குப் பிறகு எம் ஜி ஆர் ஹீரோவானதும் , அதன் பிறகு பெரும்புகழ் பெற்றதும் உலகறிந்த வரலாறு. அவரின் வளர்ச்சிக்கு அவர் திமுகவில் இருந்ததும் ஒரு காரணம். அதுபோல அவரின் திரையுலக வெற்றி திமுகவுக்கும் பயன்பட்டது. கடவுள் பக்தராக இருந்தாலும் திமுகவில் இருந்ததால் எம் ஜி ஆர் வெளிப்படையாக கோயில்களுக்கு செல்ல மாட்டார். ஆனால் அவர் வீட்டில் அவர் பூஜை செய்வதுண்டு.

   

எம் ஜி ஆர் வளர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகர் ஆனதும், அதன் பின்னர் அவருடைய படங்களில் எல்லாவற்றையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார். பாடல்களுக்கான ட்யூனை ஓக்கே செய்வது முதல் பாடல் வரிகளில் கரெக்‌ஷன் சொல்வது வரை எல்லா முடிவையும் அவர் எடுப்பார் என்று சொல்வார்கள். இந்த குணம் அவர் அரசியலுக்கு சென்றபோதும் அவருக்கு பெரியளவில் உதவியது. அதிமுகவின் ஒரே முகமாக எம் ஜி ஆர் இறக்கும் வரை இருந்தார்.

   

#image_title

 

தொடர்ந்து 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே தமிழக முதல்வர் என்ற பெருமைக்குரியவராக அவர் இன்றுவரை உள்ளார். எம் ஜி ஆர் முதலமைச்சராக இருந்தபோதும் அடிக்கடி திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்படங்களுக்கான முன் திரையீட்டு விழாக்களில் கலந்துகொள்வார். அவர் அப்படி கலந்துகொண்ட கடைசி திரைப்பட முன்திரையிடல் சத்யராஜ் நடிப்பில் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படம்தான்.

அந்த படத்தைப் பார்த்தபின்னர் வெளியே வந்த அவர் சத்யராஜின் கைகளில் பலதடவை முத்தமிட்டு பாராட்டினாராம். அந்த படத்துக்கு மத்திய அரசின் சென்சார் போர்டில் சிக்கல்கள் வந்தபோது ‘நான் பாத்துக்குறேன். நீ துணிந்து படத்தை ரிலீஸ் பண்ணு’ என நம்பிக்கைக் கொடுத்தாராம். அந்த படம் பார்த்த சில நாட்களிலேயே அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.