காபி ஷாப்பில் வேலை… நடித்த படங்கள் தோல்வி… ஒரே படம் மூலம் டாப் ஸ்டார் ஆன இந்த நடிகை யார் தெரியுமா…

By admin on ஆவணி 14, 2024

Spread the love

ஹாலிவுட் திரையுலகில் நீபோ கிட்ஸ் எனப்படும் நட்சத்திர குழந்தைகள் பெருமளவில் இருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். ஆலியா பட், சல்மான் கான் அமீர்கான், ரன்பீர் கபூர் போன்றோர் நட்சத்திர குழந்தைகள் பட்டியலில் வருவர். என்னதான் நட்சத்திர குழந்தைகளாக இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் தங்களது நடிப்பால் மக்களை கவர்ந்து தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்து உள்ளனர். அப்படி நட்சத்திர குழந்தையாக ஹிந்தி சினிமாவில் வந்து தோல்விகளையே சந்தித்து பின்னர் வெற்றியடைந்த ஒரு நடிகையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆம். அவர்தான் ஷ்ரத்தா கபூர். பாலிவுட்டின் வில்லன் நடிகர் ஆன சக்தி கபூரின் மகள் தான் ஷ்ரத்தா கபூர். 17 வயது இருக்கும் போது சினிமா வாய்ப்பு ஷ்ரத்தா கபூருக்கு கிடைத்தது. முதல் படமே சல்மான் கான் படத்தில் நடிக்க ஷ்ரத்தா கபூருக்கு வாய்ப்பு கிடைத்தது.

   

ஆனால் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் ஷ்ரத்தா கபூர் சல்மான் கான் திரைப்படத்தை நிராகரித்தார். அமெரிக்கன் ஸ்கூல் ஆப் பாம்பேயில் பள்ளி படிப்பை முடித்த ஷ்ரத்தா கபூர், பின்னர் பாஸ்கர் பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்தார். படிக்கும்போதே காபி ஷாப்பில் பணிபுரிந்தார் ஷ்ரத்தா கபூர்.

   

 

பின்னர் சினிமாவில் அறிமுகமான ஷ்ரத்தா கபூர் அமிதாப்பச்சன், பென் கிங்ஸ்லீ, ஆர் மாதவன் போன்றோர் நடித்த படங்களில் நடித்திருந்தாலும் அப்படம் தோல்வியே தழுவியது. அடுத்த படமான லவ் காதி என்னும் படத்தில் நடித்த ஷ்ரத்தா கபூருக்கு வெற்றி கிடைக்கவில்லை அப்படமும் தோல்வியடைந்தது.

மூன்றாவதாக ஆதித்யா ராய் கபூருடன் இணைந்து ஆஷிக்கி 2 படத்தில் நடித்த சதா கபூர் தனது அபாரமான நடிப்பினால் அனைவரையும் ஆச்சரியமடை செய்தார். ஷ்ரத்தா கபூர் இப்படத்தின் மூலம் பிரபலமானார். ஆஷிக்கி 2 திரைப்படமும் வெற்றி பெற்றது. இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் ஷ்ரத்தா கபூருக்கு சினிமாவில் ஏறுமுகமாக பின்னர் அமைந்தது. தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்தார் ஷ்ரத்தா கபூர்.

அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வெகு விரைவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ஷ்ரத்தா கபூர். தோல்வியை மட்டுமே சந்தித்த ஒரு நடிகை தற்போது ஒரு படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்குகிறார். அவரின் சொத்து மதிப்பு 120 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. என்னதான் ஸ்டார் கிட் ஆக இருந்தாலும் தனது விடாமுயற்சியினாலும் கடின உழைப்பினாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மேலே உயர்ந்தவர் ஷ்ரத்தா கபூர்.