இரண்டு வரி பாடலுக்காக ஒரு லட்சம் பணம் பெற்ற கண்ணதாசன்…  இக்கட்டான சூழ்நிலையில் கவியரசுக்குக் கைகொடுத்த புலமை!

By vinoth on ஆவணி 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் படங்களுக்கு பாடல்கள் மட்டும் எழுதாமல் கதை வசனமும் எழுதியுள்ளார்.

50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.

   

அவரின் ஆரம்ப கால பாடல்கள் பெரும்பாலும் எம் ஜி ஆருக்காக எழுதப்பட்டவை. அந்த பாடல்களில் கவிரசம் சொட்ட சொட்ட எழுதி ரசிகர்களை தேனில் விழுந்த வண்டை போல கிறங்கடித்திருப்பார். அப்படி ஒரு பாடலைப் பற்றியும் அதில் கண்ணதாசன் பயன்படுத்தியுள்ள ஒரு கவித்துவமான நுட்பத்தையும் பார்க்கலாம்.

   

ஆனால் அதே நேரத்தில் கண்ணதாசனை வைத்துப் பாடல்கள் எழுதி வாங்குவதும் கடினமான ஒன்று. அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சொன்ன நேரத்தில் அவர் பாடல்கள் எழுத வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் வந்துவிட்டால் பாடல்கள் எழுதிக் கொடுத்துவிட்டுதான் போவார்.

 

அப்படி ஒரு சூழலில் அவரின் மகள் கல்யாணத்துக்கு போதிய பணம் இல்லாமல் அதைப் புரட்ட கண்ணதாசன் அலைந்துள்ளார். அப்போது தெய்வம் என்ற படத்துக்குப் பாடல் எழுத இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் அழைத்துள்ளார். அந்த பாடலுக்கான மெட்டோ மிகவும் கடினமானது.

ஆனால் அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாத கண்ணதாசன் ட்யூனைக் கேட்டதும் உடனே “மருதமலை மாமனியே முருகையா… தேவரின் குலம்காக்கும் வேலைய்யா என்று மடமடவென பாடல் வரிகளை சொல்ல ஆரம்பித்துள்ளார். அதைக் கேட்டு பக்கத்து அறையில் இருந்து ஓடிவந்த தயாரிப்பாளர் சின்னப்ப தேவர் அப்போதே ஒரு லட்சத்தை அவரின் கையில் வைத்தாராம். மெய்மறந்துபோன கண்ணதாசன் முருகனுக்கும் முத்துக்குமரனுக்கும் நன்றி சொல்லி அந்த பணத்தை வைத்து மகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.