நடிகை ரஷ்மிகா மந்தனா தன்னுடைய முதல் தமிழ் திரைப்படமான சுல்தான் திரைப்படத்தில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
‘க்ரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் ரஷ்மிகா மந்தனா. என்னதான் இவர் கன்னட சினிமாவில் அறிமுகமானாலும் தெலுங்கு சினிமா தான் இவருக்கு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது. விஜய் தேவர் கொண்டவுடன் 2018 ல் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் அவர் பிரபலம் அடைந்தார்.
குறிப்பாக இப்படத்தின் ஒரு பாடலில் இடுப்பை காட்டியபடி சேலையை சரி செய்யும் ஒரு காட்சி இடம் பெறும். இந்த காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு தான் வருகிறது. ரஷ்மிகா மந்தனா தென்னிந்திய படங்களில் மட்டும் இன்றி பாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.
இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் தளபதி விஜய் உடன் இணைந்து ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் அமிதாப்பச்சன் உடன் இணைந்து ‘குட் பாய்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடிப்பதற்காக இவர் 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழில் முதன் முதலில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘சுல்தான்’ திரைப்படம் மூலம் தான் அறிமுகமானார்.
இந்நிலையில் இவர் இப்படத்தில் நடிப்பதற்காக வெறும் ரூபாய் 30 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் லட்சங்களில் ஆரம்பித்து தற்போது கோடிகளில் புரளுகிறார் ரஷ்மிகா மந்தனா என்று கூறி வருகின்றனர்.
விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…