தற்பொழுது கோடிகளில் புரளும் ரஷ்மிகா தனது முதல் தமிழ் படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு?… இணையத்தில் வெளியான அதிர்ச்சி தகவல் இதோ….

நடிகை ரஷ்மிகா மந்தனா தன்னுடைய முதல் தமிழ் திரைப்படமான சுல்தான் திரைப்படத்தில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘க்ரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் ரஷ்மிகா மந்தனா. என்னதான் இவர் கன்னட சினிமாவில் அறிமுகமானாலும் தெலுங்கு சினிமா தான் இவருக்கு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது. விஜய் தேவர் கொண்டவுடன் 2018 ல் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் அவர் பிரபலம் அடைந்தார்.

 

குறிப்பாக இப்படத்தின் ஒரு பாடலில் இடுப்பை காட்டியபடி சேலையை சரி செய்யும் ஒரு காட்சி இடம் பெறும். இந்த காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு தான் வருகிறது. ரஷ்மிகா மந்தனா தென்னிந்திய படங்களில் மட்டும் இன்றி பாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் பல முன்னணி  நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் தளபதி விஜய் உடன் இணைந்து ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் அமிதாப்பச்சன் உடன் இணைந்து ‘குட் பாய்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடிப்பதற்காக இவர் 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழில் முதன் முதலில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘சுல்தான்’ திரைப்படம் மூலம் தான் அறிமுகமானார்.

இந்நிலையில் இவர் இப்படத்தில் நடிப்பதற்காக வெறும் ரூபாய் 30 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் லட்சங்களில் ஆரம்பித்து தற்போது கோடிகளில் புரளுகிறார் ரஷ்மிகா மந்தனா என்று கூறி வருகின்றனர்.