லட்சமா..? கோடியா.? பரிதாபங்கள் கோபி – சுதாகரின் NET WORTH இது தான்.. அவர்களே கொடுத்த ஓபன் ஸ்டேட்மேன்ட்..

By Ranjith Kumar on மாசி 28, 2024

Spread the love

தமிழ்நாட்டில் யூடியூப் மூலமாக தமிழ் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் கோபி, சுதாகர் அவர்கள் தற்போது தனது சொத்து மதிப்பை பற்றி ஒரு காணொளியில் அவர்களை ஓபன் ஆக வெளியிட்டு இருக்கிறார்கள். மெட்ராஸ் சென்ட்ரல் என்ற youtube சேனல் மூலமாக தன் பயணத்தை ஆரம்பித்து தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு சேனலை கிரியேட் செய்து அதில் பல கோடி ரசிகர்களை தனக்கு பின்னல் வைத்திருக்கிறார்கள்.

கோபி, சுதாகர் என்று இரு வாலிப நண்பர்கள் சினிமா மேல் ஆர்வம் கொண்டு இன்ஜினியரிங் முடித்த பின்பாக விஜய் டிவி போன்ற தனியார் சேனல்களில் நடக்கும் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னை ஒரு ஆளாக கொண்டு வர வேண்டும் என்று நினைத்தபோது, அந்த தனியார் சேனல்களில் இவர்களை நிராகரிப்பு செய்திருக்கிறார்கள், அதனால் இவர்கள் youtube சேனல் அந்த சமயத்தில் பிரபலமாக இருந்ததால், மெட்ராஸ் சென்ட்ரல் என்ற youtube சேனலில் இணைந்து பல காமெடிகளை நிகழ்த்தி வந்தார்கள், அதில் சிறிது காலம் போன பின் இவர்களின் தனித்துவமான திறமையை கண்டு அதிக ரசிகர்கள் கூட ஆரம்பித்தார்கள்,

   

ஆனால் அந்த சேனல் இவர்களை வேலையை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள், அதன் பின்னதாக இவர்கள் சொந்தமாக பரிதாபங்கள் என்ற ஒரு சேனலில் உருவாக்கி தற்போது அதில் 40 மில்லியனுக்கும் மேலாக ரசிகர் கூட்டத்தை குவித்து வைத்திருக்கிறார்கள், என்பது காலகட்டத்தில் கவுண்டமணி செந்தில், 90 காலகட்டத்தில் வடிவேல் போன்ற பல காமெடி கலைஞர்கள் சினிமாவில் உருவானார்கள், இப்பொழுது வடிவேல் காமெடி எப்படி ஒரு மீம் கிரியேட்ருக்கு பெரிய பக்கபலமாக இருக்கிறாரோ, அதேபோல் இந்த ஜெனரேஷனின் காமெடி மீம்ஸ்கு பெரிய உதாரணமாக சுதாகர், கோபியின் மெட்ராஸ் பரிதாபங்கள் சேனலில் வரும் இவர்கள் காமெடி தான் ரசிகர் மத்தியில் பெரும் அதர்வை பெற்றிருக்கிறது,

   

தற்போதைய இவர்கள் ஒரு தனியார் youtube சேனலில் இன்டர்வியூ ஒன்றில் தனது நெட்வொத்தை பற்றி வெளியிட்டு இருக்கிறார்கள். கோபி சூதாகர்; ஒரு வீடு ஒன்னு ரெண்டு கார் ஒன்னு வச்சிருக்கோம், கோடி கணக்குல காசு இருக்குன்னு சொல்ல முடியாது, லட்சக்கணக்குல வச்சிருக்கோம், ஆனா கோடிக்கணக்கில் மக்களோட அன்பை நாங்க பெற்று இருக்கோம். அப்படின்னு நகைச்சுவையா பேசினார், பிரபலமாவதற்கு முன்னாடி 2.5 லட்சம் இருந்த கடன் இப்ப எங்களால 30 லட்சம் மாறி இருக்கு அப்படின்னு நகைச்சுவையாக பேசி ரசிக்க வைத்தார்கள், இதற்கு முன்னால் வீடு இல்லாமல் இருந்தவர்கள் சொந்தமாக வீடும் இரண்டு கார்களும் மற்றும் வங்கி கணக்கில் சில பல லட்சங்கள் உள்ளது என்று அவர்களே தெரிவித்து இருக்கிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)