தனியார் சேனல் ஆன விஜய் டிவியில் “எதிர்நீச்சல்” என்ற சீரியல் மிகப் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களிடையே இது பெரும் அதர் பெற்று வருகிறது.
சீரியல் இயக்குனர் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் உருவானது தான் இந்த எதிர்நீச்சல், இந்த சீரியலில் நாலு பெண்கள் இந்த சமூகத்தில் எவ்வளவு போராட்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று கதையை மையமாக இருக்கிறது. இந்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் மதுமிதா அவர்கள் நடித்து வருகிறார்கள்.
தற்போது சில நாட்களுக்கு முன்னால் மதுமிதா அவர்கள் தன் ஐடி நிறுவனத்தை சேர்ந்த ஒரு நண்பருடன் சேர்ந்து கடற்கரை சாலையில் காரில் அதிவேகமாக குடித்துவிட்டு சென்று எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் மீது மோதி பெரிய விபத்து ஒன்று ஏற்படுத்தி விட்டார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார்கள் இதைப்பற்றி விசாரித்த போது, இவர்கள் போதையில் தன் மேல் எந்த தவறும் இல்லை, இந்த காவலர் மேல் தான் தவறு என்று காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்கள்.
தற்போது இவர்களை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தினார்கள், அதில் இவர் குடித்து உறுதி செய்துள்ளார்கள், ஆனால் எங்கள் மேல் தவறு இல்லை என்று இன்றுவரை காவல் இடமும் பொதுமக்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் வருகிறார்கள். விபத்து ஏற்பட்ட அந்த காவலருக்கு சற்று உடல்நிலை சரியாகி வருகிறது என்று தெரியவந்துள்ளது. ஆனால் இந்த சர்ச்சை பலரும் விமர்சித்து வந்ததால், தன் இணையதள பக்கமான instagramல் ஒரு பதிவு ஒன்று போட்டு இருக்கிறார், “எனக்கு ஆதரவு தெரிவித்து என் நலம் கருதி அவர்களுக்கு மிக்க நன்றி. ஆனால் என்னை விமர்சித்து வருபவர்களுக்கு என்னைப் பற்றி தெரியாது நான் எந்த தவறும் செய்யவில்லை அதைப்பற்றி நான் கவலையும் படப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது அதற்கு அடுத்ததாக சில நிமிடங்களுக்கு முன்னால் இந்த சர்ச்சையை முடிவது கட்டுவதற்காக, சில விஷயங்களை தனது instagram இல் பதிவிட்டுள்ளார், அதாவது இது முழுக்க முழுக்க ரூமர், ஒரு மைனர் ஆக்சிடென்ட் நடந்தது உண்மைதான், அந்த விபத்துக்குள்ளான காவலர் உடல்நிலை சரியாகி மீண்டு வருகிறார், ஆனால் நான் ராங் ரோட்டிலும் போகவில்லை, குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை இந்த ஊடகவியலாளர்கள் மற்றும் youtube சேனல்களும் தான் என்னைப் பற்றி தவறாக செய்திகளை பரப்பி வருகிறார்கள், அதை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram
