சுருளிராஜன் தமிழ் சினிமாவின் பழம்பெறும் நகைச்சுவை நடிகர் ஆவார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்து வளர்ந்தவர் சுருளிராஜன். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம் என்பதாகும். சுருளி அருவி அருகே இருந்த முருகப்பெருமானின் ஞாபகமாக சுருளிராஜன் என்ற பெயரை திரை உலகிற்காக மாற்றி வைத்துக் கொண்டார். சிறுவயதில் இருந்தே நாடகங்களில் ஆர்வம் கொண்டிருந்த சுருளிராஜன் மதுரையில் வேலை பார்த்துக்கொண்டே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தார் சுருளி ராஜன். சென்னையில் கலைஞரின் காகித பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார். பின்னர் 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சுருளிராஜன். அதற்கு அடுத்ததாக சிறிய வேடத்தில் நடித்து கொண்டிருந்த சுருளிராஜன் ஆதிபராசக்தி என்ற படத்தில் சென்னை மீனவர் கதாபாத்ததில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். அதற்குப் பிறகு இவர் மிகப் பிரபலமாகி பல படங்களில் முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெய்சங்கர் ஜெமினி கணேசன் போன்ற ஆகியோர் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார் சுருளிராஜன். இயக்குனர் டி ஆர் ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் நடித்திருந்தார் சுருளி ராஜன். 1970 80களில் புகழின் உச்சியில் இருந்தால் சுருளி ராஜன்.

அந்நேரத்தில் தான் நாகேஷ் தமிழ் சினிமாவிற்கு நடிப்பதற்கு வந்தார். அவருக்கு போட்டியாக பிரபலமாக இருந்தவர் சுருளிராஜன். ராஜராஜ சோழன், ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம், அன்பே ஆருயிரே, அண்ணன் ஒரு கோவில், என்னை போல் ஒருவன், நான் ஆணையிட்டால் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் சுருளிராஜன். இது மட்டுமல்லாமல் 1980 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் 50 படங்களில் நடித்து நாகேஷ் அவர்களை ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறார் சுருளிராஜன்.
