இன்றைய சூழலில் உலகத்தில் புதிய புதிதாக ஏதேனும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. உடனே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் விடுகிறார்கள். ஒரு சிலவை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் ஒரு சிலவற்றை பார்க்கும்போது நமக்கே பயம் ஏற்படுகிறது. இயற்கையில் ஏன் இந்த மாற்றம் நிகழ்கிறது. இயற்கையை நம்மிடம் ஏதாவது சொல்ல வருகிறதா என்பது போல் ஒரு அச்சம் ஏற்படும்.
அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்திருக்கிறது. அது என்னவென்றால் சென்னையில் திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடற்கரையில் இரவு நேரத்தில் ஒளிரும் அலைகள் தென்பட்டு இருக்கின்றது. இதை பார்த்த பொதுமக்கள் அந்த கடற்கரையில் தினமும் இதை பார்ப்பதற்காக ஆச்சரியத்துடன் கூடுகின்றனர்.
2019 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது இதுபோல நீல நிற அலைகள் தென்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக ரம்யமாக ஒரு பக்கம் இருந்தாலும் எதற்காக திடீரென்று கடல் இந்த மாதிரி நீல நிறத்தில் காட்சியளிக்கிறது இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்பதை விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் கூறியது என்னவென்றால் கடலில் ஒரு வித பாசம் இருக்கிறதாகவும் தற்போது மழை பெய்து மழைநீர் கடல் நீரோடு சேர்ந்த பிறகு அதோடு நிலா வெளிச்சமும் சேர்ந்தவுடன் அது இது போல மிளிர்வதாக கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் கடலில் சிறு சிறு உயிரினங்கள் ஜெல்லி பிஷ் போன்றவர்களுடன் இந்த அரிய வகை பாசியும் சேர்ந்து நிலா வெளிச்சத்தை உள்ளிளுத்து நீல நிறமாக காட்சியளிக்கிறது என்று தெரிவித்திருக்கின்றனர்.