காதல் மனைவிக்கு 5-ஆம் மாத வளைகாப்பு… வேலைகளை இழுத்து போட்டு செய்யும் சினேகன்… வைரலாகும் வீடியோ…!!

By admin on ஐப்பசி 20, 2024

Spread the love

பிரபல பாடலாசிரியரான சினேகன் புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தோழா தோழா, ஆடாத ஆட்டமெல்லாம், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

சினேகன்-கன்னிகா முதல் திருமண நாள்..கேக் வெட்டி வேறலெவல் கொண்டாட்டம்! | snehan and kannika first wedding anniversary celebration video - Tamil Filmibeat

   

இதுவரை சினேகன் 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சினேகன் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். அந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்தார். சினேகன் நடிகை கன்னிகாவை கடந்த 2021-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

 

சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில் கன்னிகா கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு தேவராட்டம், சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அன்பாக இருப்பார்கள்.

சினேகன் கன்னிகா தம்பதிக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் கன்னிகா கர்ப்பமானார். இந்த நிலையில் சினேகன் தனது மனைவிக்கு ஐந்தாவது மாத வளைகாப்பு விழாவை விமர்சையாக நடத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)