#image_title
உலகத்தில் இருக்கும் அனைத்து உணவுகளிலும் சிறந்த காலை உணவாக நம் தமிழ்நாட்டின் இட்லி அங்கீகாரம் பெற்றிருக்கிறது. இயற்கையான முறையில் நல்ல பாக்டீரியாக்களை கொண்டு இரவு முழுவதும் புளிக்க வைத்து மறுநாள் காலை ஆவியில் வேகவைக்கப்படும் இட்லியை விட சிறந்த உணவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பலரின் விருப்பமான டிபனாகவும் இட்லி இருக்கிறது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் எல்லோர் வீட்டிலும் பிரிட்ஜ் வந்ததுதான் இட்லி மாவை மொத்தமாக அரைத்து வைத்து பயன்படுத்துகிறார்கள்.
இட்லி மாவை மொத்தமாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து தினந்தோறும் எடுத்து எடுத்து பயன்படுத்துகிறார்கள் இல்லத்தரசிகள். ஆனால் எத்தனை நாட்கள் இந்த இட்லி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கலாம் என்பது தெரியுமா? குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அதை பயன்படுத்தும் போது அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இனி காண்போம்.
இட்லிக்கு மாவு அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து நாம் பயன்படுத்தும் போது இரண்டு மூன்று நாட்களுக்குள் அதை காலி செய்து விட வேண்டும். அதையும் தாண்டி நான்கைந்து நாட்களுக்கு மேலாக ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அந்த மாவு அதிகப்படியாக புளித்து விடும் அதை பயன்படுத்தவே கூடாது. நாட்கள் கூட கூட அதிகம் புளிப்பு தன்மை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா அந்த மாவில் அதிகரிப்பதால் அதனால் உணவில் பதம் மாறும் போது அது பல ஆரோக்கிய சிக்கல்களை உருவாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இப்படி மாவை நான்கு ஐந்து நாட்களுக்கு மேலாக வைத்து நீங்கள் உபயோகப்படுத்தும் போது உங்களுக்கு வயிற்றில் வாயு தேக்கம் உண்டாகும். இதனால் உப்பசம், நெஞ்செரிச்சல், ஆசிட் ரிபிளக்ஸ் போன்ற அசௌகரியங்கள் உண்டாகக்கூடும். அதனால் அவ்வப்போது பிரஷ்ஷாக இட்லி மாவை அரைத்து பயன்படுத்துவதே உடலுக்கு பலவித நன்மைகளை தரும் என்று கூறுகிறார்கள். இனி மாவு அரைக்கும் போது உடனடியாக காலியாகும் படி அளவாக அரைத்து வைத்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…