ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை தான் சோனாலி குல்கர்னி. 50 வயதாகும் இவருக்கு நடிகை என்பதை கடந்து தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பல முகங்கள் உள்ளது. இவர் மிகவும் பிரபலமான ஹிந்தி மற்றும் மராத்தி நடிகையாக இருந்தாலும் கூட ஆரம்ப காலத்தில் தமிழிலும் நடித்துள்ளார்.
அதாவது கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான மே மாதம் என்ற திரைப்படத்தில் வினித்துடன் இவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்று இருந்த மார்கழிப் பூவே மற்றும் என் மேல் விழுந்த மழைத்துளியே போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேசமயம் இந்த இரண்டு பாடல்களுமே மே மாதம் திரைப்படத்தில் இடம் பெற்றவை என்பது இன்றும் பலருக்கு தெரியாத விஷயமாக தான் உள்ளது. இந்தத் திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் சோனாலி குல்கர்னி. இந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் இவர் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் சினிமா பக்கமே இவர் தலை காட்டவில்லை.
ஹிந்தி மற்றும் மராத்தி உள்ளிட்ட மற்ற மொழி திரைப்படங்களில் இவர் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார். இப்படியான நிலையில் தற்போது சோனாலி குல்கர்னி மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி என்ற சொகுசு எக்ஸ்யூவி ரகத்தை சேர்ந்த புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…