துல்கர் சல்மான் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை மம்மூட்டி மலையாள சினிமாவின் முன்னணி நடிகராவார். 2012 ஆம் ஆண்டு நாயகனாக சினிமாவில் காலடி எடுத்து வைத்த துல்கர் சல்மான் அதற்கு பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவர் நடித்த “ஓ காதல் கண்மணி” படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து தமிழில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் நடித்தார். அதற்கு அடுத்ததாக சமீபத்தில் இவர் நடித்த “லக்கி பாஸ்கர்” திரைப்படம் பலமொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்று தந்தது. நடிகர் துல்கர் சல்மான் ஒரு கார் லவ்வர் ஆவார். இவர் தனது கேரேஜில் விலை உயர்ந்த பல கார்களை வைத்திருக்கிறார். அவர் என்னென்ன கார்கள் வைத்திருக்கிறார் என்பதை பற்றி இனி காண்போம்.
நடிப்பை தாண்டி துல்கர் சல்மானுக்கு ஆடம்பர கார்களை சேகரிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. BMW முதல் Ferrari, Porsche வரை பல விலையுயர்ந்த கார்களையும் இவர் வைத்திருக்கிறார். இவரிடம் இருக்கும் விலையுயர்ந்த கார்கள் என்னவென்றால், Mercedes Benz SLS AMG, Ferrari 458 Spider, BMW X6 M, Volkswagen Polo GTI, BMW M3, Porsche 911 GT3 ஆகிய கார்களை வைத்திருக்கிறார்.