தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்த தோல்விக்கான காரணங்களை ஆராய, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 38 பேர் அடங்கிய கள ஆய்வு குழுவை அமைத்திருந்தார். இந்த ஆய்வுக்குழுவினர் தொகுதி வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களிடம் விரிவான கருத்துகளைக் கேட்டறிந்தனர். திரட்டப்பட்ட இந்தத் தகவல்களின் அடிப்படையிலான கள ஆய்வு அறிக்கை அண்மையில் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், திமுக அமைச்சர்கள் பலமுறை காத்திருந்தும் தங்களைச் சந்திக்க மக்கள் மற்றும் கட்சியினருக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், அதற்கு அமைச்சர்களின் உதவியாளர்களே முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுச் சங்கம் மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களைச் சரிவர நடத்தாததால் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் முடங்கி, கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியதும் தோல்விக்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுப் பொறுப்புகள் மற்றும் கோவில் அறங்காவலர் குழு நியமனங்களில் உண்மையான திமுகவினருக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குறிப்பாக, அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கும், அமைச்சர் சேகர்பாபுவுக்கு வேண்டியவர்களுக்கும் மட்டுமே முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டதாகக் கள ஆய்வில் புகார்கள் பதிவாகியுள்ளன. அதேபோல, மகளிர் உரிமைத் தொகை தகுதிவாய்ந்த பல பெண்களுக்குக் கிடைக்காதது பெண்களிடையே பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக, தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்குப் பெண் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே இருந்த அசுரத்தனமான செல்வாக்கு குறித்துக் கீழ்மட்டத் தொண்டர்கள் எச்சரித்தும், மாவட்டச் செயலாளர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்துவிட்டனர் என அறிக்கை கூறுகிறது. திமுக அரசு ஒருபுறமும், திமுக கட்சி மறுபுறமும் என இரண்டாகப் பிரிந்து நின்றதோடு, உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைக்காததும் இந்த ஒட்டுமொத்தத் தோல்விக்கு வழிவகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…