“ஊரான் வீட்டு நெய்யில ஸ்வீட்டா?”…. முரசொலி போட்ட போடு… அலறும் தமிழக அரசியல்…. விஜய்க்கு விழுந்த சம்மட்டி அடி….!

Spread the love

கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசுப் பணி நியமன ஆணைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ள சம்பவம், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 41 பேர் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், இந்த நியமனத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’, “ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க” எனும் தலைப்பில் முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்து தலையங்கம் வெளியிட்டுள்ளது. “ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க” என்பது விஜய்யின் புகழ்பெற்ற பொன்மொழிகளில் ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அக்கட்டுரை, தனது அரசியல் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், வழக்கில் இருந்து தப்பவும் அரசுப் பணிகளைப் பயன்படுத்தி விஜய் சுயலாபம் தேடுகிறார் எனச் சாடியுள்ளது. மேலும், சம்பவம் நடந்த காலகட்டம் முதல் தற்போதைய ஆட்சி நிர்வாக நடவடிக்கைகள் வரை பல நிகழ்வுகளை மேற்கோள்காட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

முன்னதாக, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவது எந்த வகையில் சாத்தியமாகும் எனக் கேள்வி எழுப்பி நாம் தமிழர் கட்சி நிர்வாகி தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை காரசாரமான கருத்துக்களைப் பதிவு செய்தது. “தினமும் நடக்கும் சாலை விபத்துகள், தீ விபத்துகள் மற்றும் பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கும் அரசுப் பணி கேட்கத் தொடங்கினால் என்ன செய்வீர்கள்? ஏராளமான இளைஞர்கள் அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் போது இவர்களுக்கு மட்டும் எவ்வாறு முன்னுரிமை தரப்பட்டது?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணிக்கு பதிலாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவதே முறையானது என்றும் வழிகாட்டினர்.

அத்துடன், கரூர் விபத்து தொடர்பாகவும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்தும் முரசொலி நாளேடு பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கூறியுள்ளது. கரூர் வட்டாரத்தில் பணியாற்றிய 19 காவல் அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்தது சி.பி.ஐ விசாரணைக்குரிய சாட்சியங்களை அச்சுறுத்தும் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்படும் நடவடிக்கைகள் அரசியல் ரீதியான மிரட்டல் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை உளவுத்துறையில் அமர்த்தியது வரை அனைத்தும் விஜய்யின் சுய பாதுகாப்புக்கான முயற்சிகள் என்றும் அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்தக் கொள்கை முடிவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளது. அரசுப் பணி நியமனம் என்பது அரசின் கொள்கை முடிவு என்ற வாதத்துடன் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் உச்சநீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு என்ன என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேவேளையில், நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவை மையமாக வைத்து ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

Nanthini

Recent Posts

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

4 minutes ago

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

37 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

56 minutes ago

“பயமா இருக்கு… அம்மாவும் 4 வருஷமா அவருடன் சேர்ந்து…” வீட்டை விட்டு ஓடிய சிறுமி… வளர்ப்பு தந்தையால் நடந்த கொடுமை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…

1 மணத்தியாலம் ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

1 மணத்தியாலம் ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

1 மணத்தியாலம் ago