தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபகாலமாக ஆட்சி அதிகாரத்திலிருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்பட போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசரகதியில் தனக்கு பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. எந்த கட்சியை சொல்கிறோம் என்று தெரிகின்றதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாக கொண்ட கட்சி வேறு எந்த கட்சியாக இருக்கும் என்று சொல்லி தான் தெரிய வேண்டுமா? இப்போதெல்லாம் அந்த கட்சியின் ஒரே இலக்கு நம்மை தூற்றுவது மட்டும்தான். தமிழக வெற்றி கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழு நேர வேலையாக உள்ளது.
1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்களுக்கு அவதூறு தான் அரசியல் கொள்கை. மக்களுடன் மக்களாக இதயபூர்வமாக இரண்டற கலந்த பிறகு மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஒரு இயக்கத்தை கண்டால் அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணி தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தை நாம் வைக்கத் தொடங்கவில்லை. மிக லேசான விமர்சனங்களை வைத்தோம், அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம். அந்த லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமாக வரவேற்பை அளிக்க தொடங்கியுள்ளனர். எந்த கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது என்ற அதிகார மயக்க முழக்கம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இது போதாததற்கு அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளை தூசி தட்டி தோரணம் கட்ட பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றி கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாமா? 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?
பவளவிழா பாப்பா – நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா. ஆட்சி அதிகாரத்திலிருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்பட போகும் அதிகார மமதை கொண்ட கட்சிதான் திமுக. அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாக கொண்ட கட்சி என்று விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…